தடுப்பூசியால் தான் மறைந்தாரா நடிகர் விவேக்? மன்சூர் அலிகானின் அதிர்ச்சியளிக்கும் கேள்விகள்..

vaccine corona death actor vivek
By Jai Apr 17, 2021 03:44 AM GMT
Report

கொரானா காலக்கட்டத்தில் சினிமா பிரபலங்களின் இறப்பு ரசிகர்களிடையே பல அதிர்ச்சி சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.

அந்தவகையில் நேற்று முன் தினம் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் விவேக் தடுப்பூசி போட்டு விழுப்புணர்வு ஏற்படுத்தினார். தடுப்பூசி போடப்பட்ட அடுத்த நாளே இதயத்தில் 100 சதவீதம் அடைப்பு இருந்ததாக இதய கோளாரோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை(17 ஏப்ரல் 4.35 மணிக்கு) சிகிச்சை பலனின்றி மறைந்தார். இந்த செய்தி தற்போது இந்திய சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ரசிகர்களும் பிரபலங்களும் தடுப்பூசி போடப்பட்டதால் தான் அவர் மறைவுக்கு நேர்ந்தது என்று கூறி வருகிறார்கள்.

நேற்று நடிகர் மன்சூர் அலிகான் தடுப்பூசியால் தான் அவருக்கு இப்படி ஆனது என்று கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார். அவருக்கு எதாவது ஒன்று ஆகினால் என்ன நடக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது மன்சூர் அலிகான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கருத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.