அஜித், விஜய்யை ஓரங்கட்டிய வைகைப்புயல்.. ஒரேவொரு பாடலால் டிரெண்டிங் நம்பர் 1-ஐ பிடித்த வடிவேலு..

Youtube Vadivelu Varisu Thunivu
By Edward Nov 16, 2022 07:21 AM GMT
Report

கோலிவுட் வட்டாரத்தில் தற்போது டாப் டாப்பிக்காக இணையத்தில் பேசக்கூடியதாக இருப்பது அஜித், விஜய் துணிவு, வாரிசு படம் பொங்கலுக்கு போட்டிப்போடுவது தான்.

துணிவு, வாரிசு

அப்படி வாரிசு படத்துடன் துணிவு எந்தவொரு பயமும் இல்லாமல் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதென்றும் அப்படத்தினை வெளியிடும் ரெட் ஜெயண்ட் தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் உதயநிதியால் வாங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

அதேபோல் விஜய்யின் வாரிசு படத்தின் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் டிரெண்டிங் இருந்தும் அப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் லீக்காகியும் வைரலானது. இப்படி இணையத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் இருவரின் படத்தினை பேசி டிரெண்ட்டிங் இடத்திற்காக போட்டிபோட்டு வந்தனர்.

வடிவேலு டாப் டிரெண்டிங்

இந்நிலையில் அவர்கள் இருவரையும் ஓரங்கட்டி வைகைப்புயல் வடிவேலு டாப் டிரெண்டிங்கை பிடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் ரெட் கார்ட்டில் இருந்து மீண்டு வந்த வடிவேலு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடலான அப்பத்தா பாடல் சில தினங்களுக்கு முன் யூடியூப்பில் வெளியாகியது. வடிவேலு பாடலில் சந்தோஷ் நாராயணன் இசையில் பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார்.

பாடலில் வடிவேலுவின் குரலில் வெளியான இப்பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பெற்று முதல் இடத்தில் டிரெண்ட்டிங் இருக்கிறது. நான் மறுபடியும் வந்துட்டேன்னு சொல்லும் அளவிற்கு டாப் நடிகர்களையே ஓரங்கட்டி இருக்கிறார் வைகைப்புயல்.