பிளான் போட்டு வாய்ப்பை தட்டி பறிக்கும் நடிகர்கள்! உச்சக்கட்ட அவமானத்தில் வடிவேலு..

Vadivelu
By Edward Apr 29, 2022 05:00 PM GMT
Report

தன்னுடைய முகபாவனையை கொண்டு ரசிகர்களை சிரிக்கவைக்கும் குணம் கொண்டவர் நடிகர் வடிவேலு. சமீபகாலமாக சில பிரச்சனைகளை ஏற்படுத்தி விட்டு ரெட்கார்ட் வாங்கி சினிமாவை விட்டு விலகினார்.

அதன்பின் அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்த தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் சினிமாவில் என்னை ஒதுக்க என்னவெல்லம் செய்தார்கள் என்பதை விவரமாக ஒப்பித்துள்ளார் வடிவேலு.

பிரண்ட்ஸ் படத்தில் நடித்திருக்கும் இரு நடிகர்கள் அப்போதே எனக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தவர். அதே மனநிலையில் தான் நான் அப்போதைய படங்களில் சகஜமாக நடித்து வந்தேன். அப்படி சகஜமாக சக நடிகர்களை வாடா போடா என்று கூட கூறியிருக்கிறேன்.

இது சில நடிகர்களுக்கு பிடிக்காமல் இயக்குனர்களிடன் கம்பிளைண்ட்டாக கூறிவிடுவார்கள். இதனால் சில நடிகர்களுடன் எனக்கு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. மலையாள படத்தில் இப்படியாக இருப்பதில். அவர்களுக்கு வெற்றி மட்டுமே கருத்தில் கொண்டு படங்களில் நடித்து கொடுப்பார்கள்.

சிறிய நடிகர்கள் என்றாலும் நான் வாடா போடா கூப்பிட்டு வந்ததை அவமறியாதையான விஷயம் என்று என்னை ஒதிக்கியும் இருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் மத்தியில் தேவையில்லாத ஒரு பிம்பத்தை உருவாக்கியது.

ஒரு படத்தில் இதனால் என்னை நீக்கிவிட்டு மற்றொரு நடிகரை சேர்த்துவிட்டு அவமானப்படுத்தினார்கள். ஒரே ஒரு படத்தில் நடிகருடன் நடித்து அவரை ஏன் இப்படி வசைப்பாடுகிறீர்கள் என்று வடிவேலுவின் இந்த கருத்திற்கு சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.