நெஞ்சுல மிதிச்சு துரத்திவிட்டாரு கவுண்டமணி!! வடிவேலுவால் ஏமாந்து போன நடிகர் புலம்பல்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் மீம்ஸ் கிரியேட்டர்களின் கிங்-ஆகவும் இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று புகழப்படும் வடிவேலு பலவிதத்தில் பலரால் புகழப்பட்டாலும் சிலரால் சாபத்தையும் கோபத்தையும் சம்பாதித்திருக்கிறார்.

அப்படி வடிவேலுவால் தன் வாய்ப்பை இழந்துள்ளேன் என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார் காமெடி நடிகர் சிசர் மனோகர். ராசாவின் மனசிலே படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வடிவேலு.
அவர் நடித்ததில் கவுண்டமணிக்கு பிடிக்காமல் போனது. அப்போது தன்னைவிட பெர்ஃபார்மெண்ட் செய்கிறானே இவன்(வடிவேலு) என்று பார்த்த கவுண்டமணி, வடிவேலுவை நெஞ்சிலே மிதித்து ஊருக்கே துரத்திவிட்டார்.அப்போது வடிவேலுவுக்கு ஆதரவாக தைரியம் கொடுத்தேன்.

மேலும் வடிவேலுக்கு உறுதுணையாக இருந்த என்னை, அவர் வளர்ந்தப்பின் என்னை கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் அவரை தீர்த்துக்கட்டலாம் என்று நினைத்த போது சீமான் தான் ஆறுதல்படுத்தினார்.
அதுமட்டுமில்லாமல் என் மூன்று பெண் பிள்ளைகள் இல்லாமல் இருந்திருந்தால் வடிவேலுவை உயிரோடு இருந்திருக்க விட்டிருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிசர் மனோகர்.