வாக்கை மீறிய வடிவேலு.. லைக்காவை ஏமாற்றிய வேறொரு ரூட்டுக்கு தாவும் வைகைப்புயல்..

Shivani Narayanan Vadivelu
By Edward Oct 08, 2022 01:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்வனாக திகழ்ந்து வந்த கவுண்டமணி - செந்திலுக்கு பிறகு காமெடி மன்னனாக திகழ்ந்து வந்தவர் வடிவேலு.

முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்தால் படம் ஹிட் என்று கூறும் அளவிற்கு உயரத்தில் இருந்த வடிவேலு சில வருடங்களுக்கு முன் பெரிய பிரச்சனை ஏற்பட்டு சினிமாவில் ரெட் கார்ட் போடப்பட்டு விலக்கப்பட்டார்.

அதன்பின் வடிவேலு இந்த பிரச்சனை எல்லாம் தாண்டி உதயநிதி ஆதரவு கொடுத்து படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசிக்காக 4 கோடி சம்பளம் வாங்கி பிரச்சனை ஏற்பட்ட நிலையில் லைக்காவுக்கு தொடர்ந்து 4 படங்கள் பண்ணுகிறேன் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

தற்போது அந்த படங்களை விட்டுவிட்டு வடிவேலு வேறொரு படத்தில் கமிட்டாகியிருக்கிறாராம். இதனால் லைக்காவிற்கு கொடுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறப்படுகிறது.

Gallery