வடிவேலு கூட நடிச்சா மார்க்கெட் போயிடும்!! மறுத்த நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி..
வடிவேலு
தமிழ் சினிமாவில் காமெடி லெஜெண்ட் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு தன்னுடைய 2வது இன்னிங்ஸை தொடர்ங்கி நடித்து வருகிறார். இடையில் பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். வடிவேலு பற்றி சமீபகாலமாக அவருடன் பயனித்த சிலர் நெகட்டிவ், பாசிட்டிவ் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
கோவை சரளா
அந்தவகையில், இயக்குநர் வி சேகர் அளித்த பேட்டியொன்றில் வடிவேலு பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். என்னுடன் கவுண்டமணி, செந்தில் பயணித்து வந்தபோது வடிவேலு அறிமுகமானார். அவர் நடித்த தேவர் மகன் பார்த்து ஒல்லியாக இருக்காரே, ஒரு ஜோடி போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
எனவே கோவை சரளாவை அணுகி ஜோடியாக நடிக்க கேட்டேன். அப்போது கமல் ஹாசன், பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்த சமயம் என்பதால், வடிவேலுவுடன் நடித்தால் என் மார்க்கெட் போய்விடும் என்று கோவை சரளா தெரிவித்தார்.
அவரை சமாதானப்படுத்தி அவரை வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க வைத்தேன். இவர்களது ஜோடி மிகபெரிய அளவில் இன்று வரை பேசப்பட்டு வருகிறது என்று வி சேகர் தெரிவித்துள்ளார்.