45 கோடி வசூல்! சிவகார்த்திகேயன் படத்தை இந்த ஒரு காரணத்திற்காக ஒதுக்கிய வடிவேலு!!

vadivelu sivakarthikeyan ponram vinnar varuthapadathavalibarsangam
By Edward Aug 27, 2021 10:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது குறுகிய காலகட்டத்தில் வளர்ந்து வந்த முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து மெரினா படத்தில் கதநாயகனாக அறிமுகமாகினார். ஆனால், படம் வெற்றி பெறவில்லை. இதையடுத்து கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் ஓரளவிற்கு பேசப்பட்ட படமாக இருந்தது.

சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் வருத்தபடாத வாலிபர் சங்கம். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி சக்கைபோடு போட்டது அப்படம். சுமார் 45 கோடிகளுக்கும் மேல் வசூல் ரீதியை எட்டியது. சிவகார்த்திகேயனுக்கு மட்டுமில்லாது, சூரி, ஸ்ரீதிவ்யா, ஷாலு ஷம்முவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இயக்குநர் பொன்ராம் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், வருத்தபடாத வாலிபர் சங்கம் என்றால் அது வடிவேலுவைதான் குறிக்கும். வின்னர் படத்தில் அப்படியொரு பெயர் வடிவேலுவால் தான் உருவானது. அதை நினைவுபடுத்துவதற்காக வருத்தப்படாத வாலிபர் சங்கம் கிளைமாக்ஸில் வடிவேலுக்காக ஒரு மிகப் பெரிய மாஸ் சீன் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தாராம் பொன்ராம்.

ஆனால் அப்போது வடிவேலு வேறு சில விஷயங்களில் பிசியாகி விட்டதால் அதில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.