பல ஆண்டுகள் விலகி இருந்ததற்கு கிடைத்த பரிசு! நாய் சேகரை விட்டு கொடுக்காத வடிவேலு!
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களில் முக்கியமாக இருந்தவர் நடிகர் வடிவேலு. தனக்கென ஒரு முகப்பாவனையுடன் தான் எது செய்தாலும் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று பல நூறு படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் வைகைபுயல்.
சில ஆண்டுகளுக்கு முன் சங்கர் படத்தில் கமிட்டாகி அப்படத்தில் ஏற்பட்ட சில சலசலப்பால் வடிவேலு வெளியேறினார். இதனால் பல கோடி நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் சங்கர் புகாரளித்து ரெட் கார்ட் கொடுத்து அனுப்பட்டார் வடிவேலு. தற்போது அந்த விஷயம் முடிவுக்கு வர வடிவேலும் ரிடர்ண்ட் என்ற பெயரில் வடிவேலு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். மேலும் லைக்கா நிறுவனத்துடன் 4 படங்களில் நடிக்கவும் கமிட்டாகினார்.
அதில் ஒரு படமாக நாய் சேகர் என்ற பெயரில் நடிக்கவுள்ளதாக இருந்தது. ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே அந்த பெயரில் ரிஜிஸ்டர் செய்துள்ளதால் டைட்டிலை தரமுடியாது என ஏஜிஎஸ் நிறுவனம் கூறியிருந்தது. தற்போது வடிவேலுவின் அப்படத்தின் டைட்டிலோடு கூடிய போஸ்டர் வெளியாகியுள்ளது. நாய் சேகர் Returns என்ற பெயரில் நாய்களுடன் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.