2 வருஷம் டேட்டிங்!! இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தியின் காதல் ஸ்டோரி இதுதான்
வருண் சக்ரவர்த்தி
இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது சாம்பியன்ஸ் டிராஃபி 2025 போட்டியில் கலந்து கொண்டு அரையிறுதி போட்டியில் நாளை மார்ச் 4ஆம் தேதி விளையாடவுள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுக்களை எடுத்த வருண் சக்ரவர்த்தி, மேன் ஆஃப் தி மேட்ச் விருதை பெற்றார். இதையடுத்து வருண் சக்ரவர்த்தி பற்றிய செய்திகளும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
வருண் - நேஹா
கட்டிட கலைஞர் வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் விளையாட வந்த வருண் சக்ரவர்த்தியின் தனிப்பட வாழ்க்கையை பொறுத்தவரை நேஹா கெடேகர் என்ற மனைவியும் ஆத்மன் என்ற மகனும் இருக்கிறார்கள். வருண் - நேஹா கெடேகர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகுவதற்கு முன் இரு ஆண்டுகள் இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். 2020ல் திருமணம் செய்து கொண்டு உறவை அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்த போது இந்தியாவில் கொரோனா பரவியதால் திருமணத்துக்கு சில மாதங்கள் தடை போட்டனர்.
பல மாதங்கள் கழித்து 2020 டிசம்பர் 12 ஆம் தேதி இருவரும் சாதாரண முறையில் திருமணம் செய்தனர். 2022ல் இவர்களுக்கு ஆத்மன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. வருண் சக்ரவர்த்தி நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.