பிரதீப்புடன் அப்படி செஞ்சத தப்பா பரப்பாதீங்க..டிராகன் பட நடிகை கயாடு வேதனை..
டிராகன்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் டிராகன். இப்படம் ரிலீஸாகி 11 நாட்களில் சுமார் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தி வருகிறது.
இப்படம் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணமாக இருப்பது 3 நாயகிகள். அதில் பல்லவி ரோலில் நடித்த கயாடு லோஹரும் ஒருவர். தற்போது ரசிகர்களின் சென்சேஷ்னல் நடிகையாக கயாடு லோஹர் திகழ்ந்து வருகிறார். அவரை பற்றி விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், டிராகன் பட பிரமோஷனில் காமெடியாக தாங்கள் செய்ததை தவறாக பரப்ப வேண்டாம் என்று கயாடு லோஹர் வேண்டிக்கொண்டிருக்கிறார்.
கயாடு வேதனை
அதாவது, ஒரு பேட்டியில் பிரதீப் - கயாடு இருவரும் ஒருவருக்கொருவர் போனை பரிமாற்றிக்கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது பிரதீப், கயாடு போனில் கயாடு லோஹர் தெலுங்கு சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை என்று மீம்ஸ் கிரியேட் செய்திருப்பதை பார்த்து கலாய்த்தார். உங்களுக்கு நீங்களே மீம்ஸ் கிரியேட் செய்து கொள்வீர்களா என்று காமெடியாக கலாய்த்திருக்கிறார் பிரதீப்.
இது சம்பந்தமான வீடியோ இணௌயத்தில் வைரலான நிலையில் பலரும் விமர்சித்து வந்தனர். இதை கேள்விப்பட்ட கயாடு லோஹர், நாங்கள் அளித்த பேட்டி தொடர்பான விமர்சன வீடியோக்களை இணையத்தில் பார்க்கிறேன். அந்த பேட்டியில் நீங்கள் பார்த்த அனைத்துமே காமெடிக்காக செய்தவை.
அந்த பேட்டியின் சுவாரசியத்தை அதிகமாக்க நானும் பிரதீப்பும் முன்பே அதைப்பற்றி பேச்சி அனைவரையும் சிரிக்க வைக்க அதை செய்தோம். நெகட்டிவான விஷயங்களை பரப்ப வேண்டாம், என்னை ஆதரித்தவர்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.
