வைகைப்புயலுடன் இந்த விசயத்தில் போட்டிபோட்ட சூப்பர் ஸ்டார்! வடிவேலு கூறிய உண்மை..

Rajinikanth Vadivelu
By Edward Jul 04, 2022 03:20 PM GMT
Report

தமிழ் சினிமாவின் வைகைப்புயலாக காமெடி மன்னனாக இருந்து வருபவர் வடிவேலு. தன்னுடைய முக பாவனையை வைத்தே சிரிக்க வைக்கும் குணம் கொண்ட வடிவேலு சில ஆண்டுகளுக்கு முன் ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்.

இதற்கு காரணம் சங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் என்று கூறப்பட்டது. அதன்பின் பல ஆண்டுகள் கழித்து அந்த பிரச்சனையெல்லாம் சுமுகமாக தீர்த்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் வடிவேலு. தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வரும் வடிவேலு சமீபத்தில் இளையராஜாவின் மதுரை கச்சேரியிலும் கலந்து கொண்டார்.

அவருடன் நடித்த சில காட்சிகள் இணையத்தில் தினமும் பகிரப்பட்டு வருவதுண்டு. அதேபோல் அவரது பேட்டி காணொலிகளும் வைரலாகி வருகிறது. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் தொகுப்பாளினி டிடி-யின் காப்பி வித் டிடி நிகழ்ச்சியில் வடிவேலு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசிய வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

சந்திரமுகி படத்தின் புகைப்படத்தை பார்த்து அந்த அனுபவத்தை வடிவேலு பகிர்ந்து கொண்டுள்ளார். படத்தில் எனக்கு சமமாக காமெடி பண்ண வேண்டும்என்று ரஜினி நடிப்பார்.

இருவரும் படத்தில் அப்படி நடிச்சிருப்போம் என்றும் ஜோதிகாவும் நீயும் தான் படத்தின் கதையில் முக்கியம். வடிவேலுவிடம் முதலில் கால்ஷீட் கேளுங்கள் என்று அப்போதே பரபரப்பை ஏற்படுத்தினார் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.