பிரபல நடிகையால் செருப்பால் அடித்துக்கொண்ட இயக்குனர் பாரதிராஜா!! காலை வாரிவிட்டதால் ஏற்பட்ட பிரச்சனை..
தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று அனைவராலும் பொற்றப்பட்டும் புகழப்பட்டும் வருபவர் இயக்குனர் பாரதிராஜா. அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி பலர் பேட்டிகளில் கூறி வருவார்கள். அப்படி 80களில் பிரபலமாகி தனக்கென ஒரு இடத்தினை பிடித்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் நடிகை வடிவுக்கரசி.
கன்னி பருவத்திலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய வடிவுக்கரசி, முதல் மரியாதை, முத்து போன்ற படங்கள் அவருக்கு மிகப்பெரிய இடத்தினை பெற்றுத்தந்தது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பாரதிராஜவுக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கு சீமையிலே படத்தில் விஜயகுமாருக்கு ஜோடியாக தன்னை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஷூட்டிங் ஆரம்பிக்கும் முதல் நாளில் படப்பிடிப்புக்கு சென்றேன். என்னை பாரதிராஜா அழைத்டு இந்த படத்தில் அவருக்கு நீ ஜோடியாக நடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அந்த கதாபாத்திரத்தை நீ பண்ணப்போவதில்லை என்றும் கூறினார்.
எனக்கு ஆத்திரம் அதிகமாக ஒருவேளை விஜயகுமாருக்கு மஞ்சுளாவை ஜோடியாக நடிக்க வைக்கப்போகிறார் என்று நினைத்து எவ பேச்ச கேட்டு இப்படி பண்றீங்க, எவள இந்த கேரக்டரில் நடிக்க வைக்க போறீங்க என்று கண்டபடி சண்டைப்போட்டேன் என்று தெரிவித்தார்.
இதனால் கோபமான பாரதிராஜா நான் செய்தது தவறு தான் என்று சொல்லியதோ தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொண்டார். நீ பொறுமையாக இரு நான் வேறொரு கதாபாத்திரம் தந்துவிடுகிறேன் என்று என்னை சமாதானப்படுத்தியதாக நடிகை வடிவுக்கரசி கூறியிருக்கிறார். ஆனால் நான் நடிக்கவே மாட்டேன் என்று கத்திவிட்டு வெளியேறியிருக்கிறார் வடிவுக்கரசி.