வைகை புயல் வடிவேலுவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ
நகைச்சுவையால் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தவர் நடிகர் வடிவேலு. 35 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் இவர், நகைச்சுவையில் மட்டுமின்றி பாடகராகவும் கலக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாமன்னன் திரைப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டியிருந்தார். அடுத்ததாக கேங்கர்ஸ் திரைப்படத்தில் நகைச்சுவையில் பட்டையை கிளப்ப வருகிறார். இந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் தகவல் உள்ளன.
வடிவேலுவிடம் இரண்டு Audi கார்கள், BMW, Toyota என நான்கு சொகுசு கார்கள் உள்ளது. இந்த கார்களின் மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் என கூறுகின்றனர். ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.