வைரமுத்து வரிகளால் விதவையான பாடகி!! இன்றுவரை கண்ணீர்விட வைக்கும் சம்பவம்..
தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படும் கவிப்பேரரசு வைரமுத்து வரிகள் பலரின் கவனத்தை ஈர்க்கும். அவர் எழுதும் பாடல்கள் இன்றுவரை பேசப்பட்டு கவர்ந்திழுக்கும். அப்படி வைரமுத்துவின் வரிகள் ஒரு பாடகியை விதவையாக்கும் அளவிற்கு மாற்றியிருக்கிறது.
எஸ் ஜானகி - வைரமுத்து வரி
சமீபத்தில் வைரமுத்து அளித்த பேட்டியில், 1982ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் காதல் ஓவியம். இப்படத்தில் நாதம் என் ஜீவனே என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். அப்பாடலில் ஒருவரியில் விலகிப் போனால் எனது சலங்கை விதவை ஆகி போகுமே என்பது இருக்கும். பாடலை எஸ் ஜானகி அம்மா பாடியிருக்கிறார். பாடல் இளையராஜா இசையில் உருவாக காத்திருக்க ஜானவி அந்த வரியை பார்த்து அசிஸ்டண்ட் இடம் கூறி அந்தவரியை எடுக்க கேட்டுள்ளார்.
விதவை
அந்தவரி தான் இப்பாடலுக்கு முக்கியம் என்று கூற அதற்கு பாட ஜானகி மறுத்துள்ளார். பின் வேறுவழியின்றி அதனை பாடிக்கொடுத்திருக்கிறார் ஜானகி. இதன்பின் வேறொரு பாடலை பாட ஸ்டுடியோவுக்கு ஜானகி வந்துள்ளார். வெள்ளை புடவை, நெற்றியில் திருநீர் என விதவையாக வந்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து கண்கலங்க வைத்தது. அப்போதில் இருந்து நெகடிவ் வரிகளை எழுதிவதில் கவனமாக இருந்து வருகிறேன் என்று வைரமுத்து நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.