பாரதிராஜாவுக்காக வைரமுத்து ஒரு ரூபா கூட வாங்கலையா!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்
இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நட்சத்திரங்கள் வரிசையில் கவிஞராக அறிமுகமாகி மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்றவர் வைரமுத்து. பாரதிராஜா இயக்கத்தில் 1980ல் வெளியான நிழல்கள் படத்தின் மூலம் கவிஞராக அறிமுகமாகினார் வைரமுத்து.
இளையராஜா இப்படத்தில் இசையமைத்திருந்தார். நிழல்கள் படத்தில் இருந்து பாரதிராஜா இயக்கும் படத்தில் சம்பளம் எதுவும் வாங்காமல் பாடல்கள் எழுதி கொடுத்து வந்தார் வைரமுத்து.
அதன்பின் இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் வைரமுத்து, நிழல்கள் படத்திற்கு பின் இந்த கூட்டணி இணையவே இல்லை. பாரதிராஜாவும் வைரமுத்துவுடன் ஏற்பட்ட மோதலில் அவரைவிட்டுவிட்டு ஏ ஆர் ரகுமான் பக்கம் சென்றுவிட்டார். அப்படி 1983ல் வெளியான கிழக்கு சீமையிலே படத்திற்கு பின் தான் மீண்டும் பாரதிராஜா - வைரமுத்து இணைந்தனர்.
சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் இணைந்த இக்கூட்டணியில் இளையராஜாவுக்கு பதில் ஏ ஆர் ரகுமான் இசையில் வைரமுத்து பாடலை எழுதினார். இப்படத்திற்கும் சம்பளம் வாங்காமல் பணியாற்றுவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தானு உண்மையை கூறியிருக்கிறார்.
கிழக்கு சீமையிலே படத்தில் அனைத்து பாடல்களையும் அழுதி கொடுத்துள்ளார் வைரமுத்து. அதற்காக வைரமுத்துவை நேரில் சென்று சுமார் 50 ஆயிரம் சம்பளமாக கலைப்புலி தானு கொடுத்துள்ளாராம்.
இதுவரை பாரதிராஜா படத்தின் பாடல்களுக்கு பணம் வாங்கியதே இலை. ஆனால் அத்தனை படத்திற்கும் சேர்த்து நீ கொடுத்துவிட்டாய் என்று வைரமுத்து தானுவிடம் கூறியிருக்கிறாராம்.