வருங்கால மாப்பிள்ளைக்கு அந்தரங்க வீடியோக்களை அனுப்பிய காதலர்.. நடிகையின் தற்கொலைக்கு காரணமே இதான்..

Serials Bollywood
By Edward Oct 20, 2022 02:15 PM GMT
Report

பாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் வைஷாலி தாக்கர். கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வைஷாலி எழுதிய 4 பக்க கடிதம்

நடிகையின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும் வைஷாலி எழுதிய 4 பக்க கடிதம் கிடைத்து அதுகுறித்து விசாரித்தும் வருகிறார்கள் போலிசார். அதில் முக்கிய புள்ளியாக வைஷாலி தாக்கரின் முன்னாள் காதலருடன் அவரது மனைவியையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

வைஷாலிக்கு சில ஆண்டுகளுக்கு முன் அபிநந்தன் என்ற பல மருத்துவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. அப்போது எடுத்த நிச்சய புகைப்படத்தையிம் வைஷாலி நீக்கிவிட்டார்.

வருங்கால மாப்பிள்ளைக்கு அந்தரங்க வீடியோக்களை அனுப்பிய காதலர்.. நடிகையின் தற்கொலைக்கு காரணமே இதான்.. | Vaishali Takkar Suicide Case Ex Lover Arrest

முன்னாள் காதலர் ராகுல்

இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டிய முன்னாள் காதலர் ராகுல் நல்லானி சமீபகாலமாக வைஷாலியை டார்ச்சர் செய்து வந்துள்ளாராம். வைஷாலி வீட்டு பக்கத்தில் வசித்து வந்த ராகுல் தான் வைஷாலி திருமணம் நிற்க காரணமாம்.

திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் கூட வைஷாலியை துன்புறுத்தியும் திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளைக்கு அந்தரங்க வீடியோக்களையும் அனுப்பி இருக்கிறார்.

திருமணம் ஏற்பாடு செய்யும் போதெல்லாம் வைஷாலியை பற்றி தவறான தகவல்களை பரப்பி திருமணத்தையே நிறுத்தியிருக்கிறார் ராகுல். இதனால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளேன் என்று கூறி வைஷாலி தற்கொலை செய்து கொண்டாராம்.