வெற்றிக்கு துரோகம் செய்றேனா? கோபத்தில் கொந்தளித்த நடிகை வைஷு சுந்தர்..
பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை வைஷு, சிறகடிக்க ஆசை பிரபலம் வெற்றி வசந்தை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் வைஷு, நடிகர் வசந்த் வசியுடன் 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' என்ற சீரியலில் இணைந்து நடித்து வருகிறார்.

இதனையடுத்து சீரியல் பிரமோஷனுக்காக இருவரும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருவது வழக்கம். அப்படி ஓணம் ஸ்பெஷல் வீடியோவை வசந்த் வசி - வைஷு இருவர்ம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். இதனை பார்த்த பலரும் வெற்றிக்கு துரோகம் செய்கிறீர்களா? இது தேவையில்லாத விஷயம் என்று நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வைஷு ஒரு கருத்தை கூறியிருக்கிறார்.
உங்க வேலை கிடையாது
அதில், எனக்கென்று ஒரு பேர், ஒரு அடையாளம், ஒரு கதை இருக்கிறது, நான் வைஷு வைஷ்ணவி. யாருடைய மனைவி என்ற அடையாளம் மட்டும் எனக்கு கிடையாது, என் பர்சனல் லைஃப் வேறு, பிரொஃபஷ்னல் லைஃப் வேறு. இரண்டையும் தயவு செய்து குழப்பாதீர்கள். நான் என்ன வேலை பண்ணுறேன், யாருடன் வேலை செய்கிறேன் என்பதெல்லாம் என் சொந்த முடிவு.
என் பர்சனல் லைஃப் பற்றி உங்களுக்கு ஒப்பீனியன் இருந்தா சொல்லலாம், ஆனா என் கேரியரை எப்படி நடத்தணும்னு முடிவு செய்ய உங்க வேலை கிடையாது. என்னுடைய ஸ்பேஸை மதியுங்கள், என் வேலையை மதியுங்கள்.

அதைவிட முக்கியமாக, என்னை ஒரு தனி நபரா மதியுங்கள். நான் வைஷு, என் வால்யூ என்னன்னு எனக்கு தெரியும். என்னுடைய பவுண்டரீஸ் என்னன்னும் எனக்கு தெரியும். அந்த பவுண்டரிஸை நான் எப்போதுமே விட்டுக்கொடுக்க மாட்டேன்.
என்னுடைய கேரியரை நானே கஷ்டப்பட்டு, ஈடுபாட்டோடு, என் அடையாளத்தோடு உருவாக்கியிருக்கிறேன். அதை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
இதற்கு வைஷுவின் கணவரும் நடிகருமான வெற்றியும் தன் ஆதரவை தன்னுடைய மனைவிக்கு அளித்துள்ளார்.