உருவகேலி விமர்சனத்தை மனதாரா ஏற்ற அஜித்குமார்! இதுக்கு தான் 25 கிலோ குறைக்கிறாரா?

valimai ajithkumar bodyshaming ak61 bluesattaimaaran ak62 valaipechi
By Edward Mar 17, 2022 12:47 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்தின் வலிமை படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. போட்ட பணத்தை தயாரிப்பாளர் எடுக்கும் அளவிற்கு வசூல் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படம் வெளியானது முதல் அஜித்தை பற்றிய உடல் மற்றும் நடன அசைவுகளை வைத்து உருவகேலியில் சிலர் விமர்சனம் செய்து வந்தனர். இதுகுறித்து ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் கூட எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்து வந்தனர்.

இந்நிலையில் உருவகேலி குறித்த விமர்சனத்திற்கு அஜித் ஒரு பதிலை நெருக்கமானவர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளாராம். அஜித் கூறியது, நான் யாருமேலையும் கோப்படவில்லை. இப்படியான விமர்சனங்களை நான் மனதார ஏற்கிறேன்.

அதில் உருவகேலியையும் நான் மனமார ஏற்றுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளாராம். பல வேறுபட்ட அநாகரீகமான வார்த்தைகளை கொண்டு சண்டைகள் இதனால் உருவாகியதால் தான் அஜித் இப்படியான பதிலை கூறியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதற்காக தான் அஜித் அடுத்த ஏகே 61 படத்திற்காக 25 கிலோ எடையை குறைக்க திட்டமிட்டு இருக்கிறாரோ என்றும் சிலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.