விக்னேஷ் சிவனை முந்திய சிறுத்தை சிவா.. விஜய், அஜித் பட கதையை புரட்டிப்போட்ட பத்திரிக்கையாளர்கள்...

Ajith Kumar Vijay Youtube Trending Videos
By Edward Sep 06, 2022 08:20 AM GMT
Report

சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் தீவிரமாக நடித்து வரும் படத்தின் அப்டேட் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருவதுண்டு. அதைவிட சமுகவலைத்தளத்தில் சினிமா விமர்சகர்களும் படம் எப்படியானது எங்கு ஷூட்டிங், கதை என்ன என்று எல்லாம் கூறி வருவார்கள்.

அப்படி சமீபகாலமாக மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்கள் வலை பேச்சு பத்திரிக்கையாளர்கள் அந்தணன், பிஸ்மி, சக்திவேல்.

அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் அஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது விசுவாசம் படம். இப்படம் வெளியாவதற்கு முன் இவர்கள், அண்ணன் தம்பி கதைத்தான் விசுவாசம்.

அண்ணன் மும்பையிலும் தம்பி மதுரையிலும் இருப்பதாகவும் இருவரும் சந்திக்கும் கதை தான். அதேபோல் நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் அண்ணன், தங்கை கதை தானாம்.

இடைவேளைக்கு பிறகு தங்கை செண்டிமென் இருக்கும் என்றும் கூறியிருந்தனர் இதை பார்த்த நெட்டிசன்கள் சினிமாவின் வெட்டிப்பேச்சாளர்கள் இவர்கள் என்று கலாய்த்து வருகிறார்.

மேலும் தற்போது அஜித், சிறுத்தை சிவா மீண்டும் ஏகே63 படத்தில் இணையப்போகிறார்கள் என்றும் அப்படத்தின் பெயர் வரம் என்றும் டைட்டில் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். ஏகே62வின் விக்னேஷ் சிவன் அப்டேட்டே இன்னும் வெளியாகாத நிலையில் அவர்கள் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி இருக்கையில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் கதை பற்றியும் சமீபத்தில் பேசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.