அஜித் பாடி ஷேமிங் பார்த்தீங்க! பிகில் படத்தை புகழ்ந்து தள்ளிய புளு சட்டை பாருங்க..

bigil valimai maaran bluesattai valimaireview
By Edward Mar 06, 2022 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் - அஜித். முன்னணி நடிகர்களாக இருக்கும் இருவரின் ரசிகர்கள் தலைவனின் படம் வந்தாலே போது விழா கோலம் போல் கொண்டாடி தெறிக்கவிடுவார்கல். படம் இருவரும் வந்தால் விமர்சனம் செய்து இணையத்தில் சண்டையும் போட்டுக்கொள்வார்கள்.

தற்போது ரசிகர்களை விட அதிகமாக கோபப்பட்டு வருகிறார் பிரபல விமர்சகர் புளூ சட்டை. படத்தின் விமர்சனம் கூறுவதை விட்டுவிட்டு நடிகரின் உடல் பற்றி சம்பந்தமில்லாமம் விமர்சனம் செய்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் அஜித்தி வலிமை படத்தை விமர்சனம் செய்யும் முறையை கவனித்த ரசிகர்கள் புளு சட்டையை கண்டபடி திட்டி வந்துள்ளனர். இதை பொருத்துக்கொள்ளாத அவர் ரசிகர்கள் அப்படி பேசியதால் அஜித்தின் உடல் பாகுவை வைத்தும் நடனம் பழைய படங்களின் பாடல் என இழுத்து கிண்டல் செய்து வருகிறார்.

இதற்கு மற்ற நடிகர்களின் ரசிகர்களும் ஆதரவு கொடுத்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் பிகில் படத்தில் விஜய்யை பற்றி பேசிய வீடியோவை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.