அண்ணாத்த, சர்கார் எல்லாம் ஓரம்போங்க! வலிமை வசூல் இத்தனை கோடியா?

valimai sarkar annaathe
By Edward Feb 25, 2022 10:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம் வலிமை. அஜித், எச் வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகிய இப்படம் 3 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் ரிலீஸாகியது. கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்த வலிமை படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் மட்டும் முதல் நாள் வசூலாக 1.82 கோடியை பெற்றுள்ளது. இதுவரையில்லாத அளவிற்கு செங்கல்பட்டில் மட்டும் 8.2 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை எந்த படமும் செய்திராத சாதனையை 36.17 கோடி அளவில் வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளதாம் வலிமை படம். இதற்கு முன் அண்ணாத்த, சர்கார், 2.0 படங்கள் 30 கோடியை தாண்டி வரிசையை முந்தி முதல் இடத்தில் வந்துள்ளது வலிமை.