வலிமை நூறு கோடி சொன்னதெல்லாம் பொய்யா? உண்மையை உடைத்த வம்சி..

ajith valimai hvinoth boneykapoor vamsi
By Edward Mar 04, 2022 10:10 PM GMT
Report

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார். மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் ரசிகர்கள் படத்தினை பார்க்கத்தான் செய்கிறார்கள்.

இந்நிலையில் 3 நாட்களில் வலிமை படம் 100 கோடியை வசூல் செய்துள்ளது என்றும் 8 நாட்கள் முடிவில் 200 கோடியை தாண்டியது என்றும் சிலர் செய்திகளாக வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இது எல்லாம் உண்மையில்லை வெறும் கற்பனை தான்.

இன்று வரை டிரேடிங் வட்டாரத்தில் கூறுவது என்னவென்றால் 76 கோடி அளவில் தான் வசூல் பெற்றிருக்கும் என்று சினிமா விமர்சகர் வம்சி கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் விநியோஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வலிமை படம் திருப்தி கொடுத்துள்ளது என்று திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery