அம்மா பிறந்தநாளுக்கு அஜித்தின் வலிமை ரிலீஸ்! உண்மையான காரணமே இதுதான்!
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகிய படம் வலிமை. போனி கபூர் ஜீ ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இப்படம் சுமார் 850க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் 4000 காட்சிகளுடன் நாளை வெளியாகவிருக்கிறது. மேலும் இப்படம் உலகமுழுவதும் 5 மொழிகளில் நாளை காலை முதல் வெளியாகவுள்ளது.
படத்தின் மீதான அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். நாளை மட்டும் 10 லட்சம் பேர் இப்படத்தினை பார்க்கவுள்ளனர். இந்நிலையில் படம் பிப்ரவரி 24 ஆம் தேதியில் வெளியாக என்ன காரணம் என்று செய்திகள் கசிந்துள்ளது.
பிப்ரவரி 24 ஆம் தேதி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினமாக இருப்பதால் போனி கபூர் மற்றும் பட்க்குழுவினர் அந்த தேதியில் வெளியாக முடிவெடுத்துள்ளனர்.
மேலும் இதே தேதியில் தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளாகவும் இருக்கிறது. நடிகர் அஜித் ஜெயலலிதா மீது அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர்.
அதனால் கூட இந்த இரு காரணங்களை முன்வைத்து படத்தினை வெளியிடவுள்ளனர். மேலும் இதை மையமாக வைத்து தான் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5 ஆம்தேதி வலிமை படத்தின் அம்மா பாடல் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.