அட பாவிங்களா இத கூட விட்டு வைக்கலையா.. சரமாரியாக காப்பியடித்த அஜித்
அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து Glimpse வீடியோ, மதர் சாங், நாங்க வேற மாறி என வெளிவந்த அணைத்து அப்டேட்டிற்கும் வரவேற்பை உச்சத்தை தொட்டது.
அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ அனைவரின் மனதை தொட்டது. அதற்கு முக்கிய காரணம், அந்த வீடியோவில் அஜித் செய்த பைக் ஸ்டண்ட் காட்சி தான். அதற்காக பலரும் அஜித்தின் தன்னமிக்கையை குறித்து பாராட்டி பேசினார்கள். இதனை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அல்லது மூன்றாவது பாடல் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.
ஆனால், அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இப்படத்தின் விசில் தீம் மியூசிக் இன்று வெளிவந்தது. இன்று மாலை வெளியான இந்த தீம் மியூசிக் தற்போது Youtube-ல் பல சாதனைகளை படைத்தது வருகிறது. இந்நிலையில், இந்த தீம் சாங்கில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட போஷன், விக்ரம் நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த தெய்வ திருமகள் படத்தில் இடம்பெற்றுள்ள மியூசிக் போலவே இருக்கிறது என்று பலரும் வீடியோ ஒன்றை ஷேர் செய்து வருகிறார்கள். மேலும் சிலர் அட, பாவிங்களா இத கூட விட்டு வைக்கலையா, அப்படியே காப்பி அடிக்கிறீங்களே. என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
??? pic.twitter.com/6y4S3PQx6q
— Siv_ (@Offl_Siva) December 22, 2021