திருமணமானதை மறைத்து 19 வயதில் தாலிக்கட்டி ஏமாற்றிய கணவர்!! சிம்பு பட நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..
சினிமாவில் சிலர் கலைஞர்கள் ஒரு காட்சிகளில் மட்டும் நடித்து பிரபலமானதுண்டு. அப்படி நடிகர் சிம்பு, நயன் தாரா, ரீமா சென், சந்தானம் நடிப்பில் வெளியான படம் வல்லவன். அப்படத்தில் பள்ளி பருவத்தில் சந்தானம் வெறும் பேப்பரை தூக்கிவிசுவார்.
அதை பார்த்த ஒரு பெண் என்ன வெறும் பேப்பரை தூக்கி எறியுற, ஏதாச்சும் எழுதி குடு என்று கூறும் காமெடி காட்சி அமைந்திருக்கும்.
அந்த பெண்ணாக நடித்தவர் தான் நடிகை லட்சுமி. சமீபத்தில் காதல் சுகுமார் அந்த நடிகையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் என்று கூறி ஒரு பதினை போட்டிருந்தார்.

கல்யாணம் செய்து இரு பிள்ளைகள் இருந்தும் கணவரால் கைவிடப்பட்டு தற்போது ஓலா டேக்ஸி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் என்றும் அவரின் சோக முகத்தினை கூறியிருந்தார்.
சமீபத்தில் லட்சுமி அளித்த பேட்டியொன்றில், 19 வயது இருக்கும் போது ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. 10 ஆண்டுகள் கழித்து இரண்டாம் திருமணம் குழந்தை பிறந்த பின்பு தான் தெரியவந்தது.
இப்போது அவருக்கு 50 வயதாகிய என்னை கைவிட்டுவிட்டார் என்றும் இப்படியே என் வாழ்க்கையே போயிட்டுச்சி என்று உருக்கமாக கூறியிருக்கிறார் நடிகை லட்சுமி.