வள்ளி சீரியல் நடிகை மோனிகாவா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
நடிகை மோனிகா
விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி போன்ற சேனல்களில் ஒளிப்பரப்பாகிய வள்ளி, ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மோனிகா.
மானாட மயிலாட, சூப்பர் மா, மிஸ் சின்னத்திரை போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்ட மோனிகா திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நடிப்பில் இருந்து சற்று விலகியுள்ள மோனிகாவிற்கு ஒரு மகனும் இருக்கிறார்.

சூப்பர் மாம் நிகழ்ச்சியில் மகனுடன் கலந்து கொண்டு கலக்கினார். தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்தபோது, என் கணவர் ஆதரவு இல்லாமல் நான் மீண்டும் நடிக்க வந்திருக்க முடியாது, குழந்தையை கவனிக்க வேண்டிய சூழலில் தெய்வம் தந்த வீடு சீரியலில் நடிக்க என்னை மோட்டிவ் செய்தார் என் கணவர் என்று கூறினார்.
தற்போது சமீபத்தில், யூடியூப் சேனலில் சமூக கருத்துக்களை பேசிவரும் மோனிகா எடுத்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

