பேசவே பயமா இருக்கு.. மேடையில் இருந்து தெறித்து ஓடிய விஜய் பட இயக்குனர்..
vijay
vamsi
beast
thalapath 66
By Kathick
விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கியிருந்த இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்து மாபெரும் தோல்வியை பீஸ்ட் படம் தழுவியுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தனது தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் தளபதி 66 படத்தின் இயக்குனர் வம்சி பிரபல நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தளபதி 66 படத்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு இப்போ படத்தை பற்றி பேச பயமா இருக்கு என்று சொல்லவிட்டு உடனடியாக மேடையை விட்டு கீழே இறங்கி விட்டார் வம்சி. பீஸ்ட் படத்தை பார்த்ததனால், இந்த பயம் அவருக்கு ஏற்பட்டதா என்று ரசிகர்கள் பலரும், கமெண்ட் அடித்து வருகிறார்கள்.