நடிகைக்கு அடி உதை.. பாலா படம் மீது மீண்டும் எழுந்த சர்ச்சை
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா தான் நடிக்கவிருந்தது. ஆனால் சில காரணங்களால் சூர்யா இதில் இருந்து விலகினார்.
இதையடுத்து வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் வணங்கான் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜிதின் என்பவர் இப்படத்திற்காக சில நடிகைகளை கேராவில் இருந்து அழைத்து வந்துள்ளார்.
அவர்களுக்கு 3 நாள் படப்பிடிப்புக்கு ரூ 22,000 சம்பளம் என்று கூறியுள்ளார். ஆனால் சம்பளத்தை கூறிய படி கொடுக்கவில்லையாம். இதைப் பற்றி கேட்கப்போன துணை நடிகைகளை அடித்து கடுமையாக தாக்கி இருக்கிறார் ஜிதின்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகை லிண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
