பல நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் வாணி போஜன்.. லிஸ்ட் பெருசா போகுதே
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் 2020 -ம் ஆண்டு வெளியான "ஓ மை கடவுளே" என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தடம் பதித்தார். இதன் பின்னர் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

வாணி போஜன் நடிகர் ஜெய் உடன் சேர்ந்து "ட்ரிப்பிள்ஸ்" என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். அப்போது இருவரும் படப்பிடிப்பில் நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியானது. ஜெய்யுடன் வாணி சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து 2021 -ம் ஆண்டு "மலேசியா டூ அம்னீசியா" என்ற படத்தில் வைபவ்க்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தார். அப்போது இருவரும் கிசுகிசுக்கப்பட்டனர்.
இதன் பிறகு வாணி போஜன் நடிகர் பரத்துடன் சேர்ந்து "மிரள்" படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் இருவரும் நெருக்கமாக இருந்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

விக்ரம் நடிப்பில் வெளியான "மகான்" படத்தில் வாணி போஜன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
