படப்பிடிப்பு தளத்தில் படுக்கையறையில் இதை செய்ய சொன்னாங்க!! உண்மையை உடைத்த வாணி போஜன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருபவர் நடிகை வாணி போஜன். அடக்கவுடக்கமாக நடிக்க ஆரம்பித்து தற்போது கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், வெப் தொடர்களில் தேவை இருக்கிறதோ இல்லையோ வேண்டுமென்றே படுக்கையறை காட்சிகள் வைக்கிறார்கள். உங்களுக்கும் இதுபோல அனுபவம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
அதற்கு வாணி போஜன், செங்கலம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாக கதை கூறினார்கள்.
அப்போது என்னிடம் ஏதும் கூறாமல், படப்பிடிப்பில் படிக்கையறை காட்சி இருக்கிறது என்று கூறினார்கள். நான் யோசித்து, கதைக்கும் இந்த காட்சிக்கும் சம்பந்தமே கிடையாது.
அது இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக இருக்கும். வம்படியாக ஏன் மசாலாவை சேர்கிறீர்கள் என்று நான் கேட்டேன். இதையும் தயாரிப்பு நிறுவனமே கேட்டதால் அந்த காட்சி இல்லாமல் படப்பிடிப்பு நடந்ததாக நடிகை வாணி போஜன் தெரிவித்திருக்கிறார்.