அந்த நடிகையா வேண்டவெ வேண்டாம்!! தூக்கி எறிந்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை வாணி போஜன்
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் தெய்வமகள் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அனைவரையும் கவர்ந்து வந்த வாணி போஜன், ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் லவ் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக்கொடுத்திருக்கிறார்.
அதில், நான் மற்ற நடிகைகளை தன்னுடைய போட்டியாக நினைத்ததில்லை என்றும் டிவியில் இருந்து வந்த பிரியா பவானி சங்கரை தன் போட்டியாளராகவும் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நான் தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் என்பதால் முன்னணி ஹீரோக்களின் படங்களில் இருந்து நீக்கியுள்ளதாகவும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் முன் நிறைய வாய்ப்புகள் கைநழுவிப்போனதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் பின் அவர்களின் படங்களில் தனக்கு வாய்ப்பு கிடைத்த போது வாய்ப்புகளை தட்டிக்கழித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
தன் நடிப்பில் மரியாதை தரமாட்டார்கள் என்று நினைத்ததால் தான் ஏன் அதை ஏற்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாகவும் பேட்டியில் கூறியிக்கிறார். இதுபோல பலரின் படட்தை தூக்கி எறிந்திருக்கிறார் நடிகை வாணி போஜன்.