சம்பாதிக்கலாம்ன்னு வந்தா துரத்திடுவாங்க போல! காதல் கிசுகிசுவால் புலம்பும் நடிகை
தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் வாணி போஜன். சீரியலுக்கு பிறகு அசத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார். இதன்பின் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இவர் முதல் முதலாக நடித்து தமிழில் வெளியான திரைப்படம் தான் ஓ மை கடவுளே. இப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரிஸ் வெளியானது. மற்ற நடிகைகளை போலவே நடிகை வாணி போஜனும் அவரது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் வைபவ், வாணி போஜன் இருவருக்கும் இடையே காதலா என்ற கேள்வி திரை வட்டாரத்தில் கிசுகிசுத்து கொண்டிருக்கிறது. இது குறித்து வாணி போஜனிடம் கேட்கும் போது சினிமாவில் வந்துவிட்டால் கிசுகிசு என்பது சர்வ சாதாரணமானது.கிசுகிசுக்களுக்கு எல்லாம் தொடக்கத்தில் மிகவும் வேதனை படுவேன்.
ஆனால், இப்போது அதனை பார்க்கும் போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது. இந்த கிசுகிசுக்களை பார்த்து நீங்கள் யாரும் வேதனைப்பட வேண்டாம் என்று என் குடும்பத்தினரிடமும் கூறிவிட்டேன். என் பெயரை பயன்படுத்தி சம்பாதிப்பவர்கள் சம்பாதித்துக் கொள்ளட்டும்.
நான் போகிற பாதை வேறு என்று கூறியிருக்கிறார் வாணி போஜன். சமீபத்தில் நடித்த மகான் திரைப்படம் வாணி போஜனுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
எதிர்பார்த்த அளவு படத்தில் காட்சிகள் இல்லாமல் கட் செய்து விட்டனர். இதனால் சினிமாவை விட்டு சீரியலுக்கு சென்று விடலாம் போல இருக்கிறது என்று தன்னை சுற்றி இருக்கிறவர்களிடம் கூறி புலம்பி வருகிறாராம்.