அந்த நடிகையா வேண்டவே வேண்டாம்.. தூக்கி ஒதுக்கிய நடிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் சின்னத்திரை நயன் தாரா..
பிரபல தொலைக்காட்சி சேனலில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் தெய்வத்திருமகள். இந்த சீரியல் மூலம் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக அறிமுகமாகினார் வாணி போஜன்.
தெய்வத்திருமகள் சீரியல் வாணி போஜனுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தியும் கொடுத்திருக்கிறது. பல ஆண்டுகள் ஒளிப்பாரப்பாகி முடிந்த இந்த சீரியலுக்கு பிறகு சிறு ரோல்களில் வெள்ளித்திரை படங்களில் நடித்து வந்தார் வாணி போஜன் . பின் ஓ மை கடவுளே படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானர். இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு சின்னத்திரை நயன் தாரா என்ற பெயரையும் எடுத்தார்.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வரும் வாணி போஜன் தான் பட்ட கஷ்டங்களை வெளிப்படையாக கூறியுள்ளார். நான் சீரியல் நடிகை என்ற ஒரே காரணத்தினால் பல படங்களில் ஒப்பந்தமாகி பின் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.

அதற்கு காரணம் ஹீரோக்கள் அவர் சீரியல் நடிகை அவருடன் நடிக்க மாட்டேன் என்ற காரணத்தை கூறி ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாணி போஜன் நம்பிக்கையோடு இருந்துள்ளார். அதன்பலனாக தற்போது பல படங்களில் நடித்து பிரபலமாகி அசத்திக்கொண்டு வருகிறார்.
இதனால் தன்னை ரிஜெக்ட் செய்த நடிகர்களே என்னுடன் நடிக்க ஆசைப்படுகிறார்கள். என்னை சீரியல் நடிகை என்று தூக்கி எறிந்தவர்கள் அணுகினாலும் நான் அவர்களுடன் நடிப்பதற்கு வேண்டாம் என்று மறுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார் வாணி போஜன்.