பீரியட்ஸ் டைமில் அப்படி பேசுனாங்க!! ஆதங்கத்தை கொட்டிய நடிகை வாணி போஜன்..
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் தெய்வமகள் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அனைவரையும் கவர்ந்து வந்த வாணி போஜன், ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் லவ் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகையாக பல மோசமான விசயங்களை சந்தித்துள்ளது குறித்தும் பகிர்ந்துள்ளார்.
ஒரு விழாவில் கலந்து கொண்ட போது பீரியட்ஸ் நேரமாக இருந்ததான் அதற்கு முன் தினம் தூங்கவில்லை. இதனால் உடல்நிலை மிகவும் சோர்வடைந்து முகம் வீங்கி வீக்கத்துடன் வந்திருந்தேன்.
இதை பார்த்து நான் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டேன் என்றும் வாணி போஜன் முகத்திற்கு என்ன ஆனது என்றெல்லாம் எழுதினார்கள். இதனால் தான் வேதனைப்பட்டதாகவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதமாதம் வரும் பிரச்சனை தான் எனக்கும் வந்தது.
அதிலும் உடல் மாற்றங்கள் ஒவ்வொரு உடலுக்கு ஏற்ப முகம் பூசின மாதிரி இருக்கும். அதைவைத்து இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார் வாணி போஜன்.