ஜிவிவுடன் படுக்கை அறை முத்த காட்சியில் நடிக்க மறுத்த பிரபல நடிகை... யார் தெரியுமா அது?
Vani Bhojan
G V Prakash Kumar
By Dhiviyarajan
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் பேச்சுலர். இப்படத்தில் ஹீரோயினாக திவ்ய பாரதி நடித்திருப்பார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.
பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக முதலில் நடிகை வாணி போஜன் தான் நடிக்கவிருந்தாராம்.
இந்நிலையில் இது குறித்து பேசிய வாணி போஜன், பேச்சுலர் படத்தில் படுக்கை அறை, நெருக்கமான காட்சிகள் அதிகமாக இருந்த காரணமாக தான் இப்படத்தில் நான் நடிக்கவில்லை. நான் பேச்சுலர் படத்தில் நடித்திருந்தால் சில காட்சிகள் எனக்காக மாத்திருக்க வேண்டும்.
இயக்குனர் எனக்காக காட்சிகள் நீக்க கூடாது. படத்தை இயக்கும் போது இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இதனால் தான் இப்படத்தில் நடிக்கவில்லை என்று வாணி போஜன் கூறியுள்ளார்.