ஒரேவொரு வருஷத்தில் இரு நடிகர்களுடன் காதல்!! சர்ச்சையில் சிக்கும் சின்னத்திரை நயன்தாரா
சின்னத்திரையில் சீரியல் நடிகையாக பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை வாணி போஜன். செய்திவாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தனக்கென ரசிகர்களை தக்க வைத்து வரும் நடிகை வாணி போஜன் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
அப்படி அவர் நடிக்கும் நடிகர்களுடன் நெருக்கமாக படுக்கை காட்சி முத்தக்காட்சியில் நடிக்க ஆரம்பித்ததால் அவர்களுடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார்.
அப்படி ஆரம்பத்தில் வைபவ், அசோக் செல்வனுடன் கிசுகிசுக்கப்பட்டு சமீபத்தில் நடிகர் ஜெய்யுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்ற செய்தியும் பரபரப்பானது.

இதனால் ஜெய் பக்கமே செல்லக்கூடாது என்று முடிவெடுத்துள்ளார் வாணி போஜன். தற்போது நடிகர் பரத்துடன் மிரள் படத்தினை தொடர்ந்து லவ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
அப்படத்தில் மிகவும் நெருக்கமான காட்சியில் நடித்ததால் வாணி போஜன் காதல் வதந்தியை சந்தித்து வருகிறார்.
இப்படி நடிக்கும் நடிகர்களுடன் கிசுகிசுக்கப்படுவதை நினைத்து அமைதியாக தன் வேலையை கவனித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படியான வதந்தி செய்திகளை நினைத்து சிரித்தபடி காமெடியாக பதிலடி கொடுத்திருந்தார்.