வனிதாவையே கதற விட்டுட்டாங்களே! Bigg Boss Ultimateல் இதுக்கா இவளோ பெரிய சண்டை

Vanitha Hotstar BB Ultimate
By Parthiban.A Feb 03, 2022 03:34 PM GMT
Report

காபி - டீக்காக இவ்ளோ பெரிய சண்டையா என எல்லோரும் கேட்கும் அளவுக்கு பிக் பாஸ் வீட்டில் சண்டை நடந்து வருகிறது. போட்டியாளர்களுக்கு ஆரம்பத்தில் டீ தூள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தனக்கு காபி வேண்டும் என சொல்லி வனிதா டீ தூளை எடுத்து ஒளித்து வைத்துவிட்டார். அதனால் மற்றவர்கள் அவருடன் சண்டை போட்டனர்.

இன்று luxury பட்ஜெட்டில் காபி வழங்கப்பட்டது. அந்த காபி டப்பாவை வனிதா எடுத்து சென்று வைத்துக்கொண்டார். அதனால் கோபமான அபிராமி இது உங்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை என சொல்லி சண்டை போட்டார்

அதற்க்கு வனிதா 'சீ.. தூ.. போடி' என சொல்லி கண்டபடி திட்டினார். அதன் பின் தான் காபியை தொட மாட்டேன் என சொல்லி தூக்கிப்போட்டுவிட்டார் வனிதா. அதன் பின் ஒரு காபிக்கு இப்படி செய்கிறார்களே என சொல்லி வனிதா கதறி கதறி அழுதார்.

இதற்கு முன்பு அவர் பிக் பாசில் வனிதா மற்றவர்களை அழ வைத்து தான் பார்த்திருக்கிறோம், அதற்கெல்லாம் சேர்ந்து இப்போது அவரே அழ வேண்டிய நிலை வந்துவிட்டது. 


Gallery