யாரு உன் புருஷன்! கடும் கோபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி!

biggboss vanitha BBJodigal
By Edward Jul 09, 2021 09:56 AM GMT
Report

நடிகர் விஜய்யின் சந்திரலேகா உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இதையடுத்து மூன்று திருமணங்கள் செய்து அதில் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சில கருத்து வேறுபாடுகளால் வெளியேறினார்.

இதுபற்றி வனிதா, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி குழுவினர் தன்னை அசிங்கப்படுத்தியும் தரைகுறைவாக பேசியும் வந்தனர். இதனால் அதில் ஈடுபட மனமில்லாமல் வெளியேறினேன் என்று கூறி பேட்டியளித்தார். தற்போது, அன்பு சரவணன் இயக்கத்தில் சிவப்பு மனிதர்கள் படத்தின் படப்பிடிப்பில் வனிதா விஜயகுமார் கலந்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களை சந்தித்த வனிதா, “கொரோனா நோயை கண்டு பயப்படாமல் இருப்பது மிகவும் நல்லது. சமூக இடைவெளியுடன் வேலை நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெகு நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புகளில் சக நடிகர்களுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தது எனது தனிப்பட்ட காரணம். எனது சுயமரியாதையின் அடிப்படையிலேயே நிகழ்ச்சியில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது. தனிப்பட்ட விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் புருஷன் எனக் கேட்கிறார்கள்’ என வருத்தத்துடன் கேட்கிறார்கள்.