13 வயதில் போதைக்கு அடிமை!! எய்ட்ஸ் நோயால் 35 வயதில் மரணமடைந்த நடிகை..
டேவி எலிசபெத் சேஸ்
ஹாலிவுட்டில் தன்னுடைய 4 வயதில் நடிக்கத் தொடங்கியவர் தான் டேவி எலிசபெத் சேஸ். 7 வயதில் சப்ரினா தி டீனேஜ் விட்ச் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார் டேவி. 2002ல் தி ரிங் என்ற திகில் படத்தில் சமாரா மோர்கன் என்ற ரோலில் நடித்து ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றார். இதன்பின் 2003ல் எம்டிவி விருதையும் அப்படத்திற்காக பெற்றார்.

2016ல் இருந்து நடிப்பில் இருந்து ஓய்வு பெற்ற டேவி எலிசபெத் சேஸின் வாழ்க்கையை வேறு திசையை நோக்கி நகர்த்தியது. அடிக்கடி சர்ச்சைகள், போதைப்பொருள் வழக்குகள், சட்டச் சிக்கல்களில் சிக்கிய டேவி, துயரமான முடிவை சந்திருக்கிறார். வாழ்வின் இறுதி நாட்களில் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிர்கதியாகினார்.

13 வயதில் போதை
13 வயதில் இருந்தே போதைப்பழக்கத்திற்கு ஆளான எலிசபெத், அப்பழக்கம் அதிகமாகி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். பலவகை போதைப்பொருள் பயன்பாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரமடைந்துள்ளார் என்று மருத்துவமனை கூறியுள்ளது.

எலிசபெத் மேலாளர் கூறுகையில், எலிசபெத் சேஸுக்கு முதலில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் செப்சிஸ் நோயாக முற்றி, சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார் என்று கூறியுள்ளார்.
ஆனால் மரணத்திற்கு இரு வாரங்களுக்கு முன் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மருத்துவப் பரிசோதகரின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் எலிசபெத் சேஸ் மரணத்திற்கான முக்கிய காரணம் எய்ட்ஸ் என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளனர்.