விஜய்யை சாருன்னு கூப்பிட முடியாது! ரசிகர்களுடன் சண்டை போடும் வனிதா
தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் ஜோடி போட்டு அறிமுகமாகியவர் நடிகை வனிதா விஜயகுமார். அப்படத்திற்கு பிறகு திருமண வாழ்க்கை பிரச்சனைகள் என சர்ச்சையில் சிக்கி சினிமா வாய்ப்பினை இழந்தார்.
பின் பிக்பாஸ், குக்வித்கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது ஒருசில படங்களில் நடித்தும் ஐட்டம் பாடலுக்கு ஆடியும் வருகிறார். இந்நிலையில் விஜய் பற்றிய சிக்கலில் மாட்டியுள்ளார் வனிதா.
ஆரம்பகட்டத்தில் நான் அவருடன் நடித்த காலத்தில் இருந்தே விஜய்யை பேர் சொல்லி தான் பழகி பேசி வந்தேன். இன்றும் அப்படி என்னால் பேசமுடியும். நான் அப்படி பேசுவது மரியாதை குறைவாக பேசுகிறேன் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
ஆனால் அப்படி என்னை மாற்றிக்கொள்ள முடியாது. தளபதியின் கதாநாயகி என்கிற அந்தஸ்து எனக்கு இருப்பதால் அப்படிதான் நடந்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.
விஜய் ரசிகர்கள் எனக்கும் ரசிகர்கள் என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளது ஒருசில விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. பெரிய வயதாக நட்சத்திரங்கள் கூட அவரை சார் என்றுதான் கூறுவார்கள் என்ற கருத்தினை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது.