பிரபு தேவாவை வெறித்தனமாக காதலித்து அதையும் கூட செய்த வனிதா!..இப்படியெல்லாம் கூட நடந்திருக்கா

Prabhu Deva Vanitha Vijaykumar Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 23, 2023 07:30 AM GMT
Report

1995 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் வனிதா. இவர் மொத்தம் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டவர். ஆனால் சில காரணங்களால் இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

இதையடுத்து டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் லிவிங்கில் இருந்து வந்தார். இதுவும் அதிக நாள் நிலைத்துநிக்கவில்லை. கடைசியில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணமும் பிரிவில் முடிந்தது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா பிரபல நடன கலைஞரான சுந்தரம் மாஸ்டரின் வாரிசு பிரபு தேவா குறித்து பேசியுள்ளார். அதில், நான் பிரபு தேவாவை வெறித்தனமாக காதலித்தேன். காதலன் படம் வெளிவந்த போது அவருடைய புகைப்படங்களை சேகரித்து வைத்துகொண்டேன்.

என்னுடைய அப்பா ஒரு முறை பிரபு தேவாவை வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது நான் அவருக்காக விதமாக பல அசைவ உணவுகளை சமைத்து வைத்திருந்தேன்.

ஆனால் அவர் அசைவம் சாப்பிடமாட்டேன் என்று கூறினார். பின்னர் நான் உடனடியாக சைவம் உணவை சமைத்து கொடுத்தேன். அந்த சமயத்தில் இருந்து அவருக்காக சைவத்திற்கு மாறவும் செய்தேன் என்று வனிதா கூறியுள்ளார்.