கிலோ கணக்கில் உடல் முழுவதும் நகைகள்! நடிகை வனிதா விஜயகுமாருடன் ஜோடிபோடும் ஹரி நாடார்.

movie biggboss3 vijaykumar
By Jon Mar 01, 2021 01:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். வாரிசு நடிகையாக அறிமுகமானாலும் அடுத்த படங்கள் அமையாமல் இருந்து வந்தார். இதையடுத்து சீரியல்களில் நடித்து வந்த வனிதா, சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இதையடுத்து அதே தொலைக்காட்சியில், காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் போட்டியாளராகவும் பணியாற்றி பிரபலமானார். இதையடுத்து லாக்டவுன் சமயத்தில், பீட்டர்பால் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து சில மாதங்களிலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். தற்போது, உடல் முழுவதும் நகைகளோடு எப்போது இருக்கும் ஹரி நாடாருடன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும், பைனான்ஸ் தொழிலும் செய்து வரும் ஹரி நாடார், அவரது அண்ணாச்சி சினி மார்க் தயாரிக்கும் 2K அழகானது காதல் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். அப்படத்தின் மோஷன் போட்டர் வீடியோவும் புகைப்படமும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.