சுற்றி வளைத்த போலீஸ், மகள் சொன்ன விஷயம்.. ஷாக்கான வனிதா

Vanitha Vijaykumar Actress Jovika Vijaykumar
By Bhavya Jul 11, 2025 07:30 AM GMT
Report

வனிதா விஜயகுமார்

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

வனிதா தற்போது தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

சுற்றி வளைத்த போலீஸ், மகள் சொன்ன விஷயம்.. ஷாக்கான வனிதா | Vanitha Open About Her Daughter Jovika

ஷாக்கான வனிதா 

தற்போது, படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் வனிதா பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " என் அம்மா வீட்டில் இருந்து என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வேனில் அழைத்து செல்கிறார்கள். எனது மகள் ஜோவிகா என்னை தனியாக விடமாட்டேன் என்று அவளும் வண்டியில் ஏறிவிட்டாள்.

சுற்றி வளைத்த போலீஸ், மகள் சொன்ன விஷயம்.. ஷாக்கான வனிதா | Vanitha Open About Her Daughter Jovika

வண்டியில் எனது பக்கத்திலேயே நின்றுகொண்டு இருந்தாள். வண்டியில் இருந்து இறங்கும்போது பெண் போலீஸ் வந்துவிட்டார்கள்.

அப்போது ஜோவிகா எங்கோயோ பார்த்துக்கொண்டு அப்படியே இறங்கி ஓடி விடுங்கள் என்று சொன்னாள். ஆனால், அப்போது எனக்கு அது புரியவில்லை.

நான் எங்கு போவேன் நீ என்ன பண்ணுவ என்று கேட்டேன். அதெல்லாம் எனக்கு தெரியும். எந்த எம்பெசிக்கு போகனும் என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும் என்று கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.