சரியான கூத்து.. மகள் குறித்து வனிதா விஜயகுமார் சொன்ன ரகசியம்

Vanitha Vijaykumar Actress Jovika Vijaykumar
By Bhavya Apr 07, 2025 02:30 PM GMT
Report

வனிதா விஜயகுமார்

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல் போனார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆக்டீவாக சினிமாவில் பயணித்து வருகிறார்.

வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ வரும் வாய்ப்புகள் பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்கிறார். இதை தவிர சொந்தமாக நிறைய தொழில்களையும் தொடங்கி கவனித்து வருகிறார்.

சரியான கூத்து.. மகள் குறித்து வனிதா விஜயகுமார் சொன்ன ரகசியம் | Vanitha Open Up About Her Daughter

சொன்ன ரகசியம் 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தன் மகள் ஜோவிகா குறித்து அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "ஜோவிகா சரியான கூத்து செய்வார்.

இவளை மாலுக்கு அழைத்து சென்றால் எங்கேயோ காணாமல் போய்விடுவாள். பதறியடித்து தேடுவோம். பிறகுதான் அந்த ட்ரிக்கை கண்டுபிடித்தேன்.

நாங்கள் பார்க்காத நேரத்தில் வேண்டுமென்றே சென்று காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு கொடுப்பவர்கள் இடத்தில் அமர்ந்துவிடுவார். இவரது பெயரை அனௌன்ஸ் செய்ய வேண்டும் என்ற ஆசையால் இதை செய்வார்" என்று தெரிவித்துள்ளார். 

சரியான கூத்து.. மகள் குறித்து வனிதா விஜயகுமார் சொன்ன ரகசியம் | Vanitha Open Up About Her Daughter