பிக் பாஸ் வீட்டில் மாமா வேலை பார்க்கும் ஜூலி! வறுத்தெடுத்த வனிதா
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இதற்கமுன் சர்ச்சைகளுக்கு பெயர்போன போட்டியாளர்களை தான் விஜய் டிவி களமிறக்கி இருக்கிறது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஷோவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த வாரம் போலீஸ் திருடன் விளையாட்டு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் பழைய 80ஸ் சினிமா நட்சத்திரங்கள் போல உடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த retro கெட்டப்பை வைத்து அவர்களே கல்லூரி கதை ஸ்கிரிப்ட் செய்து கொண்டனர்.
அவர் இவரை காதலிக்கிறார், இவர் அவரை காதலிக்கிறார் என பலரும் கல்லூரி கதையில் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருக்க, ஜூலி மட்டும் தான் அந்த காதலுக்கு ஹெல்ப் செய்யும் ரோல் செய்வதாக கூறுகிறார். அது மாமா வேலை என சொல்லி வனிதா அவரை கலாய்த்து இருக்கிறார்.
ஏற்கனவே ஜூலியை வெளியில் நெட்டிசன்கள் பல வருடமாக வறுத்தெடுத்து வருகிறார்கள், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களே அவரை பற்றி மோசமாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day17 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/GI5AXUYIpp
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 16, 2022