வனிதாவால் ரஜினி விஜயகுமாருக்கு ஏற்பட்ட பிரச்சனை? இறங்கி வராத தந்தை
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் ஆரம்பகாலகட்ட படமான சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகர் வனிதா நடிகர் விஜயகுமாரின் மகளாக தமிழில் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து வந்தார்.
திருமண வாழ்க்கை:-
திரைப்படங்களில் கவனம் செலுத்து வந்த வனிதா குடும்பத்தினரை மீறி மூன்று திருமணம் செய்து கொண்டு குடும்பதினரை ஒதுக்கி வைத்து வந்தார். குடும்பத்தினை அசிங்கப்படுத்தியதால் தாய், தந்தை, சகோதரர், சகோதரிகள் கூட வனிதாவை சந்தித்து பேசாமலும் கண்டுக்கொள்ளாமலும் இருந்து வருகிறார்கள்.
பிக்பாஸ், குக்வித் கோமாளி, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடித்து வரும் வனிதா சமீபத்தில் மூத்த நடிகர் தியாகராஜன் தன் மகனும் நடிகருமான பிரசாந்த்-ஐ வைத்து அந்தகன் என்ற படத்தினை பல வருடங்களுக்கு பிறகு இயக்கியுள்ளார்.
கூடிய சீக்கிரமே வெளியாகும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
ரஜினி பேச்சு வார்த்தை:-
சமீபத்தில் தியாகராஜனுடன் வனிதா ஒரு பேட்டியில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வது குறித்து பேசியுள்ளார். தியாகராஜன் வனிதாவை பார்த்து, படத்தின் கதாபாத்திரம் மற்றவர்களை விட உனக்கு இதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து அவளை புக் செய்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும், உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். உன் தந்தையை மிஸ் செய்கிறாயா? ஏன் நீங்கள் சேரக்கூடாது. இணைவது நல்லது தானே என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த வனிதா, கபாலி படத்தின் போது, ரஜினி அங்கிளிடம் சென்று இதுபற்றி பேசினேன்.
நான் உன் அப்பாவிடம் பேசுகிறேன் என்று எனக்கு ஆறுதலாக பேசினார். அதன்பின் ரஜினிகாந்த் அவர்களும், விஜயகுமார் அவர்களும் பார்ப்பதும் கிடையாது எதற்கும் ரஜினியை கூப்பிடுவதும் கிடையாது என்று கூறியுள்ளார் வனிதா.