பிரபல நடிகர்களுடன் நெருக்கம் காட்டும் வனிதா விஜயகுமார்!! 4 வது திருமணத்திற்கு போடும் திட்டமா!!

Vanitha Vijaykumar
By Edward Mar 03, 2023 12:00 PM GMT
Report
100 Shares

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வனிதா. நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இதன்பின் ஆகாஷ் என்பவரை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி அடுத்த ஆண்டு பெண் குழந்தை, ஆண் குழந்தையை பெற்ற வனிதா 7 ஆண்டுகளுக்கு பின் ஆகாஷை விவாகரத்து செய்து ஆனந்த் ஜே ராஜன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருடனும் வாழ்ந்து ஒரு மகளை பெற்று 2012ல் அவரையும் விவாகரத்து செய்தார்.

பிரபல நடிகர்களுடன் நெருக்கம் காட்டும் வனிதா விஜயகுமார்!! 4 வது திருமணத்திற்கு போடும் திட்டமா!! | Vanitha Vijayakumar Kiss Powe Star

இதனால் குடும்பத்தினரிடையே சண்டை ஏற்பட்டு அப்பா, அம்மாவை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட வனிதா அதன்பின் பீட்டர் பால் என்பவரை 2020ல் திருமணம் செய்து கொண்டார்.

அவரை திருமணம் செய்த சில மாதங்களிலேயே தேவையில்லாத தொடர்பில் பீட்டர் பால் இருந்ததாக கூறி அவரையும் விட்டு பிரிந்தார் வனிதா. அதன்பின் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வரும் வனிதா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 10 படங்களுக்கும் மேல் நடித்து வரும் வனிதா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடனும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு முத்தம் கொடுப்பது போன்று நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த 4வது திருமணத்திற்கு ரெடியா என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery