எனக்கு 4ஆம் திருமணமா? கோயிலுக்கு சாமி கும்பிடப்போனது ஒரு குத்தமா? கொந்தளித்த பிக்பாஸ் வனிதா

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பெற்றோர்களுடன் ஏற்பட்ட சண்டையால் இரு திருமணங்கள் நடந்து அது விவாகரத்திலும் முடிந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்தார். அவரின் நடவடிக்கையால் மனமாறி பிரிந்தும் தன் இரு பெண் பிள்ளைகளுடன் இருந்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனியார் பத்திரிக்கை தளத்தில் வனிதா விஜயகுமார் 4வது முறையாக திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது. அச்செய்தி சமுகவலைத்தளத்தில் வைரலாகி வனிதா பற்றி பல விமர்சனங்கள் எழுந்தன.

பீட்டர் பாடல் பிரிந்த வனிதா ஒரு சில மாதங்களில் வட இந்தியாவைச் சேர்ந்த பைலட் ஒருவருடன் காதலில் விழுந்தாகவும் மும்பை சென்றபோது அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதை கேள்வி பட்ட வனிதா, என்னைப்பற்றி குறித்த ஊடகம் தளத்தில் வெளியான செய்தி முழுக்க முழுக்க பொய்யானது.

அவர் யார் என்றே தனக்கு தெரியாது. அப்படியான சம்பவம் நடக்கவில்லை என்றும் கோயிலுக்கு சாமி கும்பிடப்போனால் குத்தமா! உடனே அதை வதந்தியாக திருமணம் என்று சித்தரித்து விடுவீர்களா என்று கடுமையாக சாடியுள்ளார். இதை செய்தியாக்கியது தவறில்லையா என்னை இந்த விஷயம் பெரிய காயத்தை ஏற்படுத்தியது என்று கடுமையாக சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


இதற்கு குறித்த ஊடக தளம் மன்னிப்பு கேட்டு அவர்களை காயப்படுத்தி களம்ங்கம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். இதை பார்த்து நடிகை வனிதா, நான் இப்போதும் சிங்கிள் தான். இதுபோன்ற தவறான வதந்திகலை நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்