கர்ப்பமாக இருக்கிறாரா வனிதா விஜயகுமார்? புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்

Bigg Boss Vanitha Vijaykumar
By Edward Jun 27, 2022 08:26 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தில் நடிகர் விஜய்க்கு கோடியாக நடித்து வாரிசு நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் ஒருசில படங்களில் நடித்து வந்த நடிகை வனிதா ஆகாஷ் என்பவரை திருமனம் செய்து 5 வருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துபிரிந்தார்.

இதையடுத்த இரண்டு ஆண்டுகளில் ராஜன் ஆனந்த என்பவருடன் வாழ்ந்து மூன்று வருடங்களில் விவாகரத்து செய்து பிரிந்தார். இதனால் குடும்பத்தில் பகையை சந்தித்து பிரச்சனைகளை சந்தித்தும் வந்தார். பின் தன் இரு மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்த வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எண்ட்ரி கொடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரது வெறுப்பை சம்பாதித்து வெளியேறி மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதிலும் ஒருசில வாரங்களில் வெளியேற்றப்பட்டார். கொரோனா லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி ஒருசில நாட்களின் பீட்டர் பால் நடத்தை சரியில்லை என்று அவரையும் பிரிந்தார். தற்போது மகளுடன் சேர்ந்து யூடியூப் சேனல் நடத்தியும் ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது இயக்குனர் செவியர் பிரிட்டோ தயாரிப்பில் மணி நாகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் வாசுவின் கர்ப்பிணிகள் படத்தில் நடித்து வருகிறார்.

4 வயது கட்டத்தில் கர்ப்பிணிகளாக இருக்கும் பெண்களை பற்றிய கதையாக அமைந்து வருகிறது. இதில் தான் கர்ப்பமாக இருக்கும் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பலர் கலாய்த்து வருகிறார்கள்.