ரகசியமா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டேன்.. இம்முறை விவாகரத்துக்கு வாய்ப்பே இல்ல..அதிர்ச்சி கொடுத்த வனிதா
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், விஜய் நடிப்பில் வெளியான 1995 -ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
கடந்த 2000 -ம் ஆண்டு வனிதா நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து வனிதா தொழிலதிபர் ஆனந்த ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வனிதா, அங்கு இருந்து வெளியேறிய பின்னர் பின்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் வனிதாவுக்கு ஏமாற்றம் கொடுத்தது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா, சினிமாவை தான் காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும், இனி தன்னுடைய முழு கவனத்தையும் திரைத்துறையில் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.